search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூனிஸ்டு செயலாளர்"

    வேலை விஷயமாக கோவாவுக்கு அழைத்துச் சென்று பெண்ணை கற்பழிக்க முயன்றதால் கேரள கம்யூனிஸ்டு செயலாளரை போலீசார் கைது செய்தனர். கட்சி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள மங்களாபுரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்தவர் வினோத். இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு வேலை வாங்கி தரும்படி கேட்டு இவரை அணுகினார். அவரும் போர்ச்சுக்கல் நாட்டில் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

    அதன்பிறகு வேலை வி‌ஷயமாக சிலரை சந்திக்க வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை கோவாவுக்கு வினோத் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ஓட்டலில் தனித்தனி அறை எடுத்து அவர்கள் இருவரும் தங்கினார்கள்.

    இரவு நேரத்தில் அந்த பெண்ணின் அறைக்குள் வினோத் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றார். இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் அங்குச் சென்று விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை அவர்களிடம் அந்த பெண் கூறினார்.

    உடனே இது பற்றி போலீசுக்கு ஓட்டல் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்குச் சென்று விசாரணை நடத்தி வினோத்தை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையில் இந்த தகவல் கேரளாவில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் வினோத் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    வினோத் கவுன்சிலராக பணியாற்றிய போதும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனின் ஆதரவாளர் என்பதால் அவருக்கு கட்சியில் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
    ×